கொலை வழக்கில் திமுக பிரமுகர் உள்பட 6 பேர் கைது.

1042பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் முத்துமாரியம்மன் காலனியை சேர்ந்தவர் கருப்பசாமி (35). இவர் சொந்தமாக மணல் அள்ளும் ஜேசிபி வைத்து தொழில் செய்து வந்தார். இவருக்கு பாண்டீஸ்வரி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதே பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது சிலருடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஜூன் 6ஆம் தேதி இரவு கருப்பசாமி அதே பகுதியை சேர்ந்த மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க டிஎஸ்பி சுப்பையா உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வந்த நிலையில் கருப்பசாமியை கொலை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த முத்துமாரியம்மன் காலனியை சேர்ந்த ராமர்(42), பால்பாண்டி (28), ஆனந்த் (23), வீரபாலன் (20), ஜீவா (22), விக்னேஷ் (25) ஆகிய 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி