சிவகாசி: வீடு புகுந்து 3 பவுன் நகை திருட்டு. போலீஸார் விசாரணை.

69பார்த்தது
சிவகாசி அருகே வீடு புகுந்து 3 பவுன் நகை திருட்டு. போலீஸார் விசாரணை.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள அனுப்பன்குளத்தை சேர்ந்தவர் செல்வி (வயது 35), கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவர் தர்மராஜூடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து மகளுடன் வாழ்ந்து வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு செல்வி பட்டாசு ஆலைக்கு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய போது வீட்டின் கதவு திறந்து நிலையில் இருந்தது, உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வி வீட்டில் பீரோவில் வைத்திருந்த நகைகளை சரிபார்த்த போது 3 பவுன் நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் கள்ளச்சாவியை போட்டு வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று மர்மநபர்கள் நகைகளை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி