சிவகாசி: மூதாட்டியிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது..

59பார்த்தது
சிவகாசியில் மூதாட்டியிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி வடக்கு ரத வீதியைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி (85) இவர் தனியாக வசித்து வந்தார். இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் கடந்த 5ம் தேதி வீட்டிற்குள் நுழைந்து மூதாட்டி ராஜலட்சுமியை தாக்கி அவர் அணிந்திருந்த நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். இது குறித்த புகாரில், சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர் வந்தனர். இந்த நிலையில் சிவகாசி கிழக்கு பகுதியில் உள்ள
முத்துராமலிங்கபுரத்தை சேர்ந்த முத்து முனியசாமி (29) தேவராஜ் காலனி சேர்ந்த ராஜ்குமார் (24), ஆகியோரை சந்தேகத்தின் பேரில் போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் மூதாட்டியை தாக்கி ஐந்தரை பவன் நகையை கொள்ளையடித்துச் சென்றதை ஒப்புக்கொண்டனர். இதனை அடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து நகைகளை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி