சிவகாசி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே பள்ளப்பட்டி முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்தவர் பழனிக்குமார் (37). இவர் சம்பவத் தன்று திருத்தங்கல் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது நாரணாபுரம் ரோட்டை சேர்ந்த மணிகண் டன் (எ) பாட்டில் மணி (31), பங்களாதேஷ் (எ) டோனி (30) ஆகியோர் பழனிக்குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளனர். இது குறித்து பழனிக்குமார் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டன், டோனி ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.