சிவகாசி: அரசுவேலை வாங்கி தருவதாக மோசடி பெண் உள்பட 2 பேர் கைது

65பார்த்தது
சிவகாசியில் அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி
பெண் உள்பட 2 பேர் கைது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல்லை சேர்ந்த சிவக்குமார் மனைவி உமாமகேஸ்வரி (37). இவரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி திருத்தங்கல் சுப்பிரமணியர் கோவில் தெருவை சேர்ந்த சக்திவேல் மனைவி மாரியம்மாள் (55), செந்தில்குமார் (40), சுப்பிரமணியன் மற்றும் ஒருவர் என 4 பேரும் ரூ. 8 லட்சம் பணம் வாங்கி உள்ளனர். இதே போன்று ஏழாயிரம்பண்ணையை சேர்ந்த ஹேமா என்பவரின் உறவினர் பழனிக்குமார் என்பவரிடம் பாரஸ்ட் ஆபிசர் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 4 லட்சம் பெற்றுள்ளனர். சிட்டி யூனியன் வங்கியில் வேலை வாாங்கி தறுவதாக அமலா என்பவரிடம் ரூ. 9 லட்சம் பெற்றுள்ளனர். மொத்தம் ரூ. 21 லட்சத்தை பெற்றுக்கொண்டு உமா மகேஸ்வரிக்கும், அமலாவுக்கும் போலியாக தயாரிக்கப்பட்ட பணி நியமன ஆணைகளை வழங்கி உள்ளனர்.
ஹேமாவிடம் பணத்தை மட்டும் பெற்றுக்கொண்டனர். பணி நியமன ஆணை எதுவும் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்த 3 பேரின் சார்பில் உமாமகேஸ்வரி திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் மாரியம்மாள் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து மாரியம்மாள், செந்தில்குமார் ஆகிய 2 பேரை கைது செய்து மற்ற 2 பேரை தேடி வருகிறார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி