சிவகாசி: ஆற்றில் மண் திருடிய 2 பேர் கைது...

56பார்த்தது
சிவகாசி அருகே சட்டவிரோதமாக ஆற்றில் மண் திருடிய 2 பேர் கைது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள வடமலாபுரம் பாலம் அருகில் திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை மடக்கி சோதனை செய்தனர். இதில் 100 மூடைக ளில் ஆற்றில் சட்டவிரோதமாக மண் அள்ளி வந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து டிராக்டரில் வந்த முருகேசன் (41), ஆனந்தகுமார் (20) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் டிராக்டரில் இருந்த100 மூடை மண் பறிமுதல் செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி