சிவகாசி அருகே சட்டவிரோதமாக மண் அள்ளிய 2 பேர் கைது. மண் அள்ளும் இயந்திரம் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி உட்கோட்டத்துக்கு உட்பட்ட எம். புதுப்பட்டி போலீஸ் நிலைய பகுதியில் அதிக அளவில் மணல் திருட்டு சம்பவம் நடந்து வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கொடுத்த ரகசிய தகவலின் பேரில் எம். புதுப்பட்டி காவல் நிலைய சார் ஆய்வாளர் சிராஜுதீன் மற்றும் போலீசார் சாணார்பட்டிஆற்று பகுதியில் ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு எம். சொக்கலிங்காபுரத்தை சேர்ந்த கண்ணன் (வயது 38), காளிதாஸ் (20) ஆகியோர் சட்டவிரோதமாக மண்
அள்ளியது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மண் அள்ளும் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.