சட்டவிரோதமாக பட்டாசு தயார் செய்த கட்சி நிர்வாகி கைது

5116பார்த்தது
விருதுநகர மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல்லில் சட்டவிரோதமாக குடியிருப்பு பகுதியில் பட்டாசு தயாரித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் கே. கே. நகர் குடியிருப்பு பகுதியில் சட்ட விரோதமாக ஒருவர் தனது வீட்டில் பட்டாசு தயாரிக்கிறார் என கிடைத்த தகவலின் பெயரில் திருத்தங்கல் காவல் ஆய்வாளர் வேதவல்லி மற்றும் தனிப்பிரிவு காவலர் வெங்கடேஷ் மற்றும் போலீசார் கே. கே. நகர் பகுதியில் சோதனை நடத்தினர்.

சோதனையில் குடியிருப்பு பகுதியில் எளிதில் தீப்பற்ற கூடிய கரிமருந்துகளை வைத்து வீட்டில் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது. விசாரணையில் வீட்டில் பட்டாசு தயார் செய்த செல்வராஜ் (என்ற )திலீபன் வயது 54 எனவும் அவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் எனவும் தெரியவந்தது.

இது குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து அவரிடம் இருந்து பட்டாசு தயாரிக்க பயன்படும் அலுமினிய பவுடர் உள்ளிட்ட வேதியல் பொருள்களை பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி