அதிகாரிகளின் தொடர் கெடுபிடி சிவகாசியில் பட்டாசு தொழில் கடும் பாதிப்பு.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில்அதிகாரிகளின் தொடர் கெடுபிடிகாரணமாக பட்டாசு தொழில்கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்திலேயே அதிக அளவிலான1500 பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருவது விருதுநகர் மாவட்டத்தில்தான், சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை, விருதுநகர், தாயில்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் சுமார் எட்டு லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி
வரும் நிலையில் சிவகாசியிலுள்ள ஆலைகளில் பட்டாசு உற்பத்தி விருவிருப்பாக நடைபெற்று வருகின்றன. நாக்பூர். டி. ஆர். ஓ, சென்னை லைசென்ஸ் பெற்ற ஆலைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் உற்பத்தி பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி
உள்ளன. பட்டாசு வியாபாரம் ஒருபுறம் விருவிருப்பாக நடைபெற்று வரும் வேளையில் கட்நத சில தினங்களாக அதிகாரிகள் திடீர் கெடு பிடிகள் காரணமாக பட்டாசு தொழிலும் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் தொடர் ரெய்டு காரணமாக சில பட்டாசு ஆலைகள் விடுமுறை விட்டு விடுகின்றனர். பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்த வேண்டிய வருவாய், தீயணைப்புதுறை, பட்டாசு தனி தாசில்தார் என இந்த தொழிலுக்கு பாதுகாப்பாக உறுதுணையாக இருக்கும் நேரத்தில் போலீசார் மட்டும் தொடர் சோதனையில் ஈடுபடுவது பட்டாசு தொழிலாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.