சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால கட்டுமான பணி பூமி பூஜையுடன் தொடக்கம்.
அமைச்சர்கள் பங்கேற்பு.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்கில் மேம்பால கட்டுமான பணிக்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, K. K. S. S. R இராமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.
சிவகாசி-ஶ்ரீவில்லிபுத்தூர் உள்ள சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு கடந்த ஜனவரி 25ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார். அடுத்த இரு நாட்களிலேயே கட்டுமான பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது. சிவகாசி இரட்டை பாலம் முதல் சட்சியாபுரம் பேருந்து நிறுத்தம் வரை 700 மீட்டர் நீளத்திற்கு 12 மீட்டர் அகலத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ரூ. 61. 74 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சிவகாசி அடர்ந்த மக்கள்தொகையும், ஏராளமான பட்டாசு மற்றும் அச்சுத் தொழிற்சாலைகள் கொண்ட ஒரு தொழில் நகரமாகும். மேலும் இப்பகுதி பள்ளிகள் கல்லூரிகள் இயக்கும் இடமாக இருப்பதால், ரூ. 61. 74 கோடி மதிப்பீட்டில் புதிதாக மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், சிவகாசி சார்- ஆட்சியர் பிரியா ரவிச்சந்திரன் மற்றும் நெடுஞ்சாலை பொறியாளர்கள், மேயர் சங்கீதா, துணை மேயர் விக்னேஷ்பிரியா, அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகவர்கள் கலந்து கொண்டனர்.