விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 2 புதிய பேருந்துகளைத் தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கொடியசைத்துத் துவக்கி வைத்தார். அப்பகுதி மக்களின் நீண்ட காலமாக கோரிக்கையாக இருந்தது. தற்போது அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த பகுதிகளுக்குப் பேருந்து இயக்கப்படுகிறது. புதிய வழித்தட பேருந்துகள் கிராமப்புற மக்கள் எளிதாகப் பயணிக்க உதவுவதாக தெரிவித்தனர்.
மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ - மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது. இந்த பேருந்துகளில் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கொண்டனர். குறிப்பாக, அதிக அளவில் பெண்கள் 'விடியல் பயணம்' மேற்கொண்டனர்.இந்நிகழ்வில், விருதுநகர் போக்குவரத்து துறை மேலாளர், தாசில்தார், அரசு அதிகாரிகள், திருச்சுழி ஒன்றிய கழக செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.