சிவகாசியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா மாநில லாட்டரி சீட்டு எண்கள் பறிமுதல், ஒருவர் கைது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி ரிசர்வ் லயன் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா மாநில லாட்டரி சீட்டு எண் சட்ட விரோதமாக விற்பனை செய்வதாக சிவகாசி நகர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்த தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் அங்கு கேரளா மாநில லாட்டரி சீட்டு எண்ணை் விற்பனை செய்து வந்த ரிசர்வ் லயன் பகுதியை சேர்ந்த உத்தம நாதனை கைது செய்து அவரிடமிருந்து கேரளா லாட்டரி சீட்டின் எண்ணை பறிமுதல் செய்து சிவகாசி நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.