தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது, தமிழகத்தை பட்டா போட்டு விற்று விடுவார்கள்- சிவகாசியில் நடைபெற்ற அதிமுக மகளிர் அணி மகளிர் தின கொண்டாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திரபாலாஜி ஆவேச பேச்சு.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக மகளிரணி சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தின விழா மற்றும் உலக மகளிர் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சர்
ராஜேந்திரபாலாஜி
தமிழகத்தில் சண்டை சச்சரவு இல்லாத, பிரச்சனை இல்லாத எம்ஜிஆர்-ஜெயலலிதா அதிமுக ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் மலரச் செய்ய வேண்டும், நேர்மையான காவல்துறை அதிகாரிகள் கொலை செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது, இன்றைய தினம் தமிழகத்தில் கொலை சம்பவங்களுடன் நேர்மையானவர்கள் வாழ முடியாத சூழ்நிலை உருவாகி நல்லவர்கள் வாழ்வது கேள்விக்குறியாகி உள்ளது. சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி சிங்கம் போல் கர்சிக்கிறார், சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் முதல்வர் திணறுகிறார், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது. நிகழ்ச்சியில் அதிமுகாவை சேர்ந்த பெண் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.