ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் தெப்ப திருவிழா குவிந்த பக்தர்கள்.

669பார்த்தது
சிவகாசி ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் தெப்ப திருவிழா குவிந்த பக்தர்கள்.
விருதுநகர் மாவட்டம்
சிவகாசியில் இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப் பண்டுக்கு சொந்தமானஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக ஸ்ரீபத்திரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில், வெள்ளி சிங்கவாகனத்தில் கடைக் கோவிலில் எழுந்தருளினார். பின்னர் கடைக் கோவிலில் இருந்து வீதிவலம் வந்து பத்திரகாளியம்மன் கோவிலுக்கு வருகை தந்தார். இதனையடுத்து மேளதாளம் முழங்க, கண்கவரும் வாணவேடிக்கை நிகழ்ச்சிகளுடன் தெப்ப திருவிழா நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்றன
ஸ்ரீபத்திரகாளியம்மனும்,
ஸ்ரீமாரியம்மனும் வீதியுலா ஊர்வலத்தில் கலந்து கொண்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழா முக்கிய நிகழ்வான தெப்ப திருவிழா மாரியம்மன் கோவில் வளாகத்திலுள்ள தெப்பத்தில் அலங்காரம் செய்த தேரில்
ஸ்ரீபத்திரகாளியம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தெப்ப தேரில் அம்மன் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தன. தெப்ப திருவிழாவை காண சிவகாசி மற்றும் சுற்று பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டரை். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டு தேவஸ்தான நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி