விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் இன்று (ஜூலை-31) இறுதியாண்டு பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு நடைபெற்ற மத்திய, மாநில வேலைவாய்ப்பிற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன், இ. ஆ. ப. , அவர்கள், மத்திய, மாநில அரசுகளின் வேலைவாய்ப்புகள், அவற்றிற்கான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வது மற்றும் தங்களை தயார் செய்து கொள்ளுதல் குறித்து உரையாற்றினார்.