விருதுநகரில் உள்ள மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை (சுய சேவை பிரிவு)யில் கூட்டுறவுத் துறையின் சார்பில், பொது மக்களுக்கு கூட்டுறவு பொங்கல் என்ற பெயரில் பொங்கல் சிறப்புத் தொகுப்பு விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன், துவக்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டத்தில், இன்று (ஜன.3) கூட்டுறவுத் துறையின் பொங்கல் தொகுப்பு முதல் விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார். பொதுமக்கள் இந்த குறைந்த விலையிலான இனிப்பு பொங்கல் தொகுப்பினை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.