சிவகாசி: புகையிலை பறிமுதல். 4 பேர் கைது....

57பார்த்தது
சிவகாசியில் பல லட்ச மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல். 4 பேர் கைது.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசியில் தமிழக அரசால் தடைசெய்யபட்ட புகையிலை அதிகளவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இதைதடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து அவ்வப்போது புகையிலை பிடிப்பட்டாலும் தொடர்ச்சியாக விற்பனை நடைப்பெற்று வரும் நிலையில், சிவகாசி அம்மன் கோவில்பட்டித் தெருவை சேர்ந்த செல்வமுருகன், விக்னேஷ், வீரமணி, மணிகண்டன் ஆகிய நான்கு பேரும் கர்நாடாக மாநிலத்திலிருந்து டிரான்ஸ்போர்ட் மூலம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை கடத்தி வரப்பட்டு இருசக்கர வாகனத்தில் 4 பேரும் சேர்ந்து கொண்டு வரும் போது பாறைப்பட்டி அருகே சோதனை சாவடியில் சிவகாசி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஆனந்த குமார் தலைமையில் வாகன சோதனையில் தமிழக அரசால் தடை செய்யபட்ட புகையிலை கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டன மேலும் புகையிலை மற்றும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் 4 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி