மாரியம்மன் கோவில் ஆடிவெள்ளியை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜை

77பார்த்தது
. *ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் சுமங்கலி பெண்கள் உலக நன்மைக்காகவும், மழைவேண்டியும், குழந்தைவரம் வேண்டியும், 208 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. *


ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் சுமங்கலி பெண்கள் பங்குபெறும் திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். அதை போல் இந்த ஆண்டு ஆடி மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும்,
குழந்தைவரம் வேண்டியும்,
சுமங்கலி பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருக்கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் பெரிய மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருக்க, பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் அனைவரும் குங்குமத்தால் திருவிளக்கிற்கு அர்ச்சனை செய்து 208 திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. திருவிளக்கு பூஜையை கோவில் அர்ச்சகர் சுந்தர்ராஜன் நடத்தி வைத்தார்.

தொடர்புடைய செய்தி