ஆதார் சேவை மையத்துக்கு திடீர் பூட்டு. அதிர்ச்சியில் மக்கள்..

83பார்த்தது
சிவகாசி ஆதார் சேவை மையத்திற்கு திடீரென பூட்டு. பொதுமக்கள் பெரும் அவதி.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசியிலுள்ள தாலுகா அலுவலகத்தில் அரசு கேபிள் டி. வி நிறுவனம் மற்றும் எல்காட் நிறுவனக்கட்டுப்பாட்டின் கீழ் கடந்த10ஆண்டுகளுக்கு மேலாக நிரந்தர ஆதார் சேவை மையம் இயங்கி வந்தது. இங்கு புதிய ஆதார் அட்டை பதிவு மற்றும்முகவரி, பெயர்,
செல்போன் நம்பர் மாற்றம் பணிகளுக்கு தினமும் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் வந்து பயன் அடைந்தனர் காலை10 மணிக்கு அலுவலகம் திறக்கும் என்ற நிலையில் காலை 6 மணிக்கு வரிசையில் நின்று இடம் பிடிக்கும் அளவிற்கு இந்த ஆதார் சேவை மையத்தில் கூட்டம் அதிகம் காணப்படும்.
பொதுமக்களுக்கு பெரிதும் பயன் உள்ளதாக இருந்த இந்த ஆதார் சேவை மையம் தற்போது திடீரென பூட்டப்பட்டுள்ளது. ஆதார் சேவை மையத்தில் பணிபுரிந்த நபர் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டதாலும் புதியதாக நபர் பணியில் அமர்த்தப்படாததாலும் ஆதார் சேவை மையம் பூட்டப்பட்டதாக கூறப்படுகின்றது. சிவகாசி சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் தூரத்தில் இருந்து ஆதார் பதிவு மையத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். தாலுகா அலுவலகத்தில் பூட்டப்பட்ட ஆதார் சேவை மையத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி