சிவகாசி மாநகராட்சியின் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு போதிய நிதி ஒதுக்கப்படும் அமைச்சர் கே. என். நேரு பேட்டி.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர்கள் கே. என். சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம்
தென்னரசு ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். சிவகாசியில் ரூ 10 கோடி மதிப்பீட்டில் புதிய மாநகராட்சி அலுவலக கட்டிடமும், புதிய வணிக வளாக கட்டிடமும் கட்டும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. சிவகாசி வருகை தந்த அமைச்சர்கள் கே. என். நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் புதிய மாநகராட்சி அலுவலக கட்டுமான பணிகளை ஆய்வு செய்தனர். பணி விரைவாகவும் தரமாகவும் செய்ய வேண்டு என ஒப்பந்ததாரரிடம் அமைச்சர் கே. என். நேரு வலியுறுத்தினார். பின்னர் சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி மேயர்
சங்கீதா தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள் கே. என். நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு கலந்து கொண்டு கவுன்சிலர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலெக்டர் ஜெயசீலன், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார், எம்எல்ஏகள் அசோகன், தங்கப்பாண்டியன், மாநகராட்சி ஆணையாளர் சங்கரன், துணை மேயர் விக்னேஷ்பிரியா, ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் விவேகன்ராஜ் மற்றும் மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.