சட்ட விரோதமாக பட்டாசு பதுக்கிய எட்டு பேர் மீது வழக்கு பதிவு.

1190பார்த்தது
சிவகாசி பகுதியில் சட்ட விரோதமாக பட்டாசுகள் பதுக்கிய எட்டு பேர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி திருத்தங்கல் கருணாநிதி காலனியைச் சேர்ந்தவர் சிவபெருமான் இவர் தனது வீட்டின் அருகே உள்ள தகர செட்டில் அரசு அனுமதி இன்றி பட்டாசுகள் பதுக்கிய நபரை திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து பட்டாசுகளைபறிமுதல் செய்தனர். மேலும், பேராபட்டியை சேர்ந்த சிதம்பரம், தாயில்பட்டி பரமசிவம், எஸ். புதுப்பட்டி சரவணவேல் இந்திரா நகர் பொன்னுச்சாமி ஆகியோர் பேராபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் அறைக்கு வெளியே பாதுகாப்பற்ற முறையில் பட்டாசுகளை வைத்திருந்தனர். கிழக்கு போலீசார் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். மீனம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த வெயில் முத்து கோணம்பட்டி ரவிசங்கர் ஆகியோர் பேராபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் பட்டாசுகளை பாதுகாப்பற்ற முறையில்வைத்திருந்தனர். கிழக்கு போலீசார் இருவர் மீது வழக்கு பதிவு செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். சிவகாமிபுரம் காலனி ராஜ்குமார், நாரணாபுரம் புதுார் குருசாமி ஆகியோர் பேராபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் பாதுகாப்பற்ற முறையில் பட்டாசுகளை வைத்திருந்தனர். கிழக்கு போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி