விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் செய்யது இப்ராஹீம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது சிவசங்குபட்டி அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்தவரை போலீசார் பிடித்து விசாரணை செய்ததில் அவர் முன்னுக்கு பின்னாக பதில் கூறவே மேற்படி நபரை பிடித்தது விசாரணை செய்து சோதனை செய்ததில் அவர் தன் முதுகில் அரிவாளுடன் இருந்துள்ளார்.
அவரிடம் மேலும் விசாரணை செய்ததில் அவர் ஏழாயிரம்பண்ணை பகுதியை சேர்ந்த மதன்குமார் (19) என தெரிவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்து அவரிடமிருந்து அரிவாளை பறிமுதல் செய்தனர்.