விருதுநகர் அருகே
காரிசேரி சீரியல் லைட் அமைத்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக உயர் அழுத்த மின் கம்பி மீது சீரியல் லைட் வயர் உரசி அதிலிருந்து ஏற்பட்ட மின் கசிவினால் மைக்செட் உரிமையாளர்
திருப்பதி(28) மீது மின்சாரம் பாய்ந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி லலிதா (25) திருப்பதியின் பாட்டி
பாக்கியம்(65) உள்ளிட்ட 5 பேர் அவரை காப்பாற்ற முயன்றனர். அப்போது 5 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் திருப்பதி, அவரது மனைவி லலிதா, மற்றும் பாக்கியம் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் உயிரிழந்த தம்பதிக்கு 2 1/2 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் லலிதா தற்போது 7 மாத கர்ப்பிணி என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து உயிர் இழந்த திருப்பதி உடன் பிறந்த சீனிவாசன் பேசினர்