விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தனியார் திருமண மண்டபத்தில்,
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமைகள் நலச்சங்க கூட்டமைப்பு, மற்றும் மாவட்ட
சுதேசி மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்
இணைந்து, 350 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இந்த நிகழ்வில்
சங்கத்தின் தலைவர் ராஜரத்தினம்,
மாநில துணைச் செயலாளர் அங்குசாமி, மாவட்ட பொருளாளர் தீன தயாளன், மற்றும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர், ரகுராமன், சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜன், ஆகியோர் கலந்து கொண்டு ரூ. 10 லட்சம் மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான இருசக்கர நாற்காலிகள் பார்வையற்றோருக்கான உபகரணங்கள் வழங்கினார்கள். பின்னர் இந்த கூட்டத்தில், பின்வரும் 10 அம்சம் கொண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.