விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தனியார் மஹாலில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், நடப்பு நிதியாண்டில் தொடங்கப்பட்ட வளர்ச்சி பணிகள் அனைத்தையும் இந்த மார்ச் மாத இறுதிக்குள் முடிக்க முதலமைச்சர் உத்தரவிட்டதால் அதற்கான ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், கோடைகாலம் வருவதால் குடிநீர் பிரச்சனை வராமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மேலும் குப்பைகளை முறைப்படி அகற்றவும் தெருவிளக்குகளை பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மும்மொழிக்கொள்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அண்ணா காலத்திலிருந்து இருமொழிக்கொள்கையைத்தான் தமிழகம் ஏற்றுள்ளது என்றும் இருமொழிக்கொள்கையை தான் திமுக அரசு பின்பற்றி வருகிறது அதனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் இருமொழிக்கொள்கையை ஆதரிக்கும் கட்சிதான் அமோக வெற்றி பெறும் என்றார்.