சாத்தூர்: சாலை விபத்தில் தொழிலாளி பலி. போலீஸார் விசாரணை...

75பார்த்தது
சாத்தூர் அருகே சாலை விபத்தில் தொழிலாளி பலி.
விருதுநகர் மாவட்டம், சாத்தூரை அடுத்த தாயில்பட்டி ஊராட்சி அண்ணாநகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 35). இவர் சிவகாசியில் உள்ள காலணி கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் மோட் டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவ தற்காக மண்குண்டாம்பட்டிக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது தாயில் பட்டி அருகேசென்றபோது அந்த வழியாக வந்த காரும். மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் செண்பகவே லன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலசுப்பிரமணியனின் உடலை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரி சோதனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் கோடங்கிபட்டியை சேர்ந்த மணிகண்டனை (46) கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி