சாத்தூர்: வாராந்திர ரெயில்கள் சேவை நீடிப்பு....

70பார்த்தது
விருதுநகர் மாவட்டம், மதுரை, நாகர்கோவிலில் இருந்து கச்சிகுடா செல்லும் வாராந்திர ரெயில்களின் சேவை நீட்டிப்பு.
தென்மாவட்ட பயணிகளின் வசதிக்காக வாராந்திர சிறப்பு ரெயில்களின் இயக்கத்தை நீட்டித்து தென்னக ரெயில்வே மற்றும் தென்மத்திய ரெயில்வே மண்டலங்கள் உத்தரவிட்டு உள்ளன. தெலுங்கானா மாநிலம் கச்சிகுடாவில் இருந்து வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மதுரை வரை இயக்கப்படும் இந்த வாராந்திர சிறப்பு ரெயில் (வ. எண். 07191) வருகிற ஜூன் 9-ந் தேதி முதல் அடுத்த மாதம் ஜூலை 28-ந் தேதி வரை வழக்கமான நேரத்தில் இயக்கப்படும்.
மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து வாரந்தோறும் புதன்கிழமைகளில் கச்சிகுடாவுக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வ. எண். 07192) வருகிற ஜூன் 11-ந் தேதி முதல் அடுத்த மாதம் ஜூலை 30-ந் தேதி வரை வழக்கமான நேரத்தில் இயக்கப்படும்.
அதேபோல, கச்சிகுடாவில் இருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மதுரை வழியாக விடுதுநகர், சாத்தூர், நாகர்கோவில் வரை இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வ. எண். 07435) வருகிற ஜூன் 13-ந் தேதியில் இருந்து அடுத்த மாதம் ஜூலை11-ந் தேதி வரை இயக்கப்படும். மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் மதுரை வழியாக கச்சிகுடா வரை இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வ. எண். 07436) வருகிற ஜூன் 15-ந் தேதி முதல் அடுத்த மாதம் ஜூலை 13-ந் தேதி வரை இயக்கப்படும் என்று தென்னை ரயில்வே தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி