விருதுநகர் மாவட்டம்,
சாத்தூர் அருகே மாரடைப்பால் டெய்லர் பலி.
சாத்துார் அருகே படந்தால் வசந்தம் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சரவணன், டெய்லராக வேலை செய்து வந்தார். மது போதையில் வீட்டுக்கு வந்தார். சிறிது நேரத்தில் நெஞ்சு வலியால் அவதிப்பட்டுள்ளார். தாய் சங்கரேஸ்வரி ஆட்டோவில் அவரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அங்கு டாக்டர் பரிசோதித்த போது வழியிலேயே அவர் இறந்தது தெரிய வந்தது. இது குறித்து சாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.