சாத்தூர்: தாம்பரம்- நாகர்கோவில் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

6பார்த்தது
விருதுநகர் மாவட்டம், தாம்பரம்-நாகர்கோவில் சிறப்பு ரயில் சேவை 2 வாரம் நீட்டிப்பு
தாம்பரம்-நாகர்கோவில் இடையே வாராந்திர ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ;
தாம்பரம்-நாகர்கோவில் இடையே வாராந்திர ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாகர்கோவிலில் இருந்து சாத்தூர் வழியாக தாம்பரத்திற்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும், தாம்பரத்தில் இருந்து சாத்தூர் வழியாக நாகர்கோவிலுக்கு திங்கட்கிழமைகளிலும் இந்த சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்தது. அதன் சேவை காலம் நிறைவடைவதையொட்டி, மேலும் 2 வாரத்திற்கு நீட்டித்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: -
தாம்பரம்-நாகர்கோவில் இடையேயான சிறப்பு வாராந்திர ரயில் சேவை 2 வாரம் நீட்டிக்கப்படுகிறது. அதன்படி, நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு (வ. எண் 06012) வரும் ஜூலை 6 மற்றும் 13-ந் தேதிகளிலும் (ஞாயிற்றுக்கிழமை), தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு (06011) வரும் ஜூலை 7 மற்றும் 14-ந் தேதிகளிலும் (திங்கட்கிழமை) சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்படுகிறது என ரயில்வே அறிவித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி