சாத்தூர்: பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில் சேவை நீடிப்பு...

52பார்த்தது
விருதுநகர் மாவட்டம், நாகர்கோவில்-காச்சிகுடா இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நீட்டிப்பு
பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு ரயில் சேவையில் சில மாற்றங்களை தெற்கு ரயில்வே செய்து வருகிறது. ;
இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: - பயணிகளின் வசதிக்காக தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா-நாகர்கோவில் இடையிலான சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நீட்டிக்கப்படும். அதன்படி,
காச்சிகுடாவில் இருந்து வருகிற ஜூன் - 13-ந் தேதி முதல் அடுத்த மாதம் ஜூலை 11-ந் தேதி வரை (வெள்ளிக்கிழமை மட்டும்) நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண்-07435) இயக்கப்படுகிறது. அதே போல, நாகர்கோவிலில் இருந்து வருகிற ஜூன் -15-ந் தேதி முதல் அடுத்த மாதம் ஜூலை 13-ந் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) காச்சிகுடாவிற்கு சிறப்பு ரெயில் (07436) இயக்கப்படுகிறது என்று தெற்கு ரயில்வே செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி