சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3-ம் கட்ட அகழாய்வில் அலங்கார மட்பாத்திரத்தால் தயாரிக்கப்பட்ட உருண்டை வடிவ மணி கண்டெடுப்பு.
விருதுநகர் மாவட்டம்,
சாத்துார் அடுத்த வெம்பகோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதியில் மூன்றாம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 18-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அகழாய்வில் இதுவரை தங்க நாணயம், செப்பு காசுகள், உடைந்த நிலையிலுள்ள சூடு மண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், கண்ணாடி மணிகள், வட்ட சில்லு, சங்கு வளையல்கள் உள்ளிட்ட 2850-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் மூன்றாம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று தோண்டப்பட்ட அகழாய்வு குழியில் ஃபையன்ஸ் (Faience) (சோடினைப்பீங்கான்) எனப்படும் அலங்கார மட்பாத்திரத்தால் தயாரிக்கபட்ட உருண்டை வடிவ மணி, மாவு கற்களால் செய்யபட்ட நீள்வட்ட வடிவ மணிகள், அலங்கரிக்கபட்ட சங்கு வளையல்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் முன்னோர்கள் கலைநயமிக்க அணிகளை பயன்படுத்தியுள்ளதாக அகழாய்வு இயக்குனர் பொன்பாஸ்கர் தெரிவித்துள்ளார்.