சாத்துார் அருகே மரத்தடியில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயார் செய்தவர் கைது. பட்டாசுகள் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
சாத்துார் வட்டம், ஏழாயிரம்பண்ணை அருகே பாண்டியாபுரம் பகுதியிலுள்ள முனியசாமி கோவில் அருகே உள்ள மரத்தடியில் வைத்து சட்டவிரோதமாக பட்டாசுகள் தயார் செய்து இருப்பு இருப்பதாக ஏழாயிரம்பண்ணை காவல் நிலையத்திற்கு தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராம்மூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வில் அதே பகுதியை சேர்ந்த 33 வயதுடைய சதீஸ்குமார் என்பவர் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயார் செய்தது தெரிய வந்தன. மேலும் பதுக்கி இருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.