விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சட்ட விரோதமாக பட்டாசு திரி வைத்திருந்தவர் கைது.
வெம்பக்கோட்டை ஒன்றியம் பாண்டியாபுரம் பஸ்நிறுத்தத் தில் ஏழாயிரம் பண்ணை சப்-இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரின் சாக்குப்பையை சோதனை செய்தனர். அதில் சட்டவிரோதமாக தயார் செய்யப்பட்ட 20 குரோஸ் பட்டாசு திரிகள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் ஏழாயிரம் பண்ணை எம். ஜி. ஆர். நகர் தெற்கு தெருவை சேர்ந்த பொன் ராஜ் (வயது 25) என்பது தெரியவந்தது. இதையடுத்து பொன்ராஜை போலீசார் கைது செய்தனர்.