சாத்துார் அருகே உள்ள வெம்பக்கோட்டையில் பலத்த மழையால் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது.
போக்குவரத்து துண்டிப்பு
விருதுநகர் மாவட்டம்,
சாத்துார் அருகே உள்ள வெம்பக்கோட்டையில் பெய்த பலத்த மழையினால் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக் கப்பட்டது.
வெம்பக்கோட்டைமற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு லேசான மழை பெய்தது. பின்னர்அதிகாலையில் பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக பெய்த மழையினால் நிறைய இடங்களில் தரைப்பாலங்கள் மூழ்கியுள்ளன. அதிலும் குறிப்பாக
வெம்பக்கோட்டையிலிருந்து ஏழாயிரம்பண்ணை செல்லும்
தரைப்பாலம் மூழ்கியதால் சங்கரன்கோவிலிருந்து ஏழாயிரம்பண்ணை வழியாக சாத்தூர் செல்லும் பஸ்கள், ராஜபாளையத்தில் இருந்து வெம்பக்கோட்டை, ஏழாயிரம் பண்ணை வழியாக சாத்தூர் செல்லும் பஸ்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட் டது.
மேலும் வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் எண்ணற்ற தரைப்பாலங்கள் உள்ளன.
நேற்று அதிகாலை பெய்த கன மழையினால் குகன்பாறை,
குடும்பன்பட்டி, வல்லம்பட்டி, கோட்டைப்பட்டி ஆகிய தரைப்பாலத்தை மூழ்கிய படி தண்ணீர் செல்வதால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலை உள்ளன. எனவே மேற்கண்ட தரைப்பாலத்தை அகற்றி விட்டு உயர்மட்ட பாலம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றனர்.