10 கிலோ மீட்டருக்கு சுற்றளவு பெரும் அதிர்வை ஏற்பத்திய வெடி விபத்து.
சாத்தூரை அடுத்த கீழ தாயில்பட்டியில்
கணேசன் என்பவருக்கு சொந்தமான ஹிந்தூஸ்தான் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.
இந்த பட்டாசு ஆலை
மத்திய வெடி பொருள் கட்டுபாட்டு துறையால் அனுமதி பெற்றது.
மேலும் பட்டாசு தயாரிக்கும் பணியை காலையில் தொடங்கிய நிலையில் பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும் போது தரையில் உராய்வு ஏற்பட்டு தீடிரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டன. மேலும் இந்த வெடிவிபத்து தாயில்பட்டி சுற்றிய10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பெரும் அதிர்வை ஏற்பத்திய வெடி விபத்து.
இன்று விடுமுறை நாளான ஞாயிற்று கிழமை என்பதால் விதிமீறி பட்டாசு செயல்பட்டன. இந்த வெடிவிபத்தில் 10 க்கும் மேற்பட்ட அறைகள் தரை மட்டாயின. மேலும் தொடர்ந்து பட்டாசு ஆலைக்குள் வெடி வெடித்துக் கொண்டே இருப்பதால் தீயை அணைக்க முடியால் தீயணைப்ப வீரர்கள் திணறி வருகின்றனர்.