சர்த்துார் அருகே வெம்பக்கோட்டை நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில் முதல்முறையாக 102 சென்டிமீட்டர் ஆழத்தில் ஈயம் கண்டெடுப்பு. நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய கலைப்பொருட்களைப் தமிழ் மக்கள் பயன்படுத்தியுள்ளதை உறுதிசெய்வதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்.
விருதுநகர் மாவட்டம்,
சாத்தூரை அடுத்த வெம்பகோட்டை அருகே விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதியில் மூன்றாம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 18-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அகழாய்வில் இதுவரை தங்க நாணயம், சங்கினால் செய்யப்பட்ட பதக்கம், செப்பு காசுகள், உடைந்த நிலையிலுள்ள சூடு மண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், கண்ணாடி மணிகள், வட்ட சில்லு, சங்கு வளையல்கள் உள்ளிட்ட 4000-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கட்ட கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது 87 சென்டிமீட்டர் ஆழத்தில் சுடு மண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட பதக்கம் மற்றும் இரும்பு கிடைத்துள்ளது. மேலும், முதல்முறையாக 102 சென்டிமீட்டர் ஆழத்தில் ஈயம் கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தமிழ்மக்கள் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய பதக்கங்கள் மற்றும் இதர கலைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளதை உறுதிசெய்யும் வகையில் கிடைக்கப்பெற்றுள்ள புதிய கண்டுபிடிப்புகளால் பெருமகிழ்ச்சியடைவதாக நிதி அமைச்சர் "எக்ஸ்" வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.