சாத்தூர்: தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம்.....

75பார்த்தது
விருதுநகர் மாவட்டம், பராமரிப்பு பணி: தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம்.
கன்னியாகுமரி-ஹவுரா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வ. எண். 12666) வருகிற ஜூன் 7-ந் தேதி விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும். இந்த ரெயில் மானாமதுரை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். அதேபோல, கோவை-நாகர்கோவில் ரெயில் (வ. எண். 16322) வருகிற ஜுன் 6-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை திண்டுக்கல் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். மதுரை-கச்சிக்குடா வாராந்திர சிறப்பு ரெயில் (வ. எண். 07192) ஜூன் 11-ந் தேதி மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்திற்கு பதிலாக சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக மதியம் 12 மணிக்கு புறப்படுமென தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி