சாத்துார் இரயில் நிலையத்தில் மயங்கி விழுந்து மூதாட்டி பலி. போலீஸார் விசாரணை.
விருதுநகர் மாவட்டம்,
சாத்துார் ரயில்வே ஸ்டேஷனில் மயங்கி விழுந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பலியானார். துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த 79 வயது மூதாட்டி தனலட்சுமி, இவர் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் சுவாமி கும்பிடுவதற்காக ரயில் மூலம் சாத்துார் ரயில்வே ஸ்டேஷன் வந்தார். அப்போது இறங்கும் போது திடீரெனமயங்கி விழுந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மூதாட்டியை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும்
மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மூதாட்டி நேற்று இறந்தார். இதுகுறித்து சாத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.