சாத்தூர் அருகே பட்டாசுகள் பதுக்கிய நபர் கைது. பட்டாசுகள் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
சாத்துார் அருகே உள்ள சுப்பையாபுரம் விலக்கு அருகே கெளதம் என்ற பெயரில் பட்டாசு கடை இயங்கி வருகிறது. மேலும் இந்த பட்டாசு கடையின் பின்புறமுள்ள காலிமனையில் தகரசெட் அமைத்து சட்ட விரோதமாக பட்டாசுகள் பதுக்கி இருப்பதாக சாத்தூர் தாலுகா காவல் நிலையத்துக்கு தகவல் வந்ததன. மேலும் தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் பாக்கியராஜ் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சோதனை செய்தனர். சோதனையில் தகர செட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சரவெடிகள் மற்றும் பல தரப்பட்ட பட்டாசு பண்டல்களை பறிமுதல் செய்தனர். மேலும் குற்ற செயலில் ஈடுபட்ட மேலப்புதூரை சேர்ந்த புவனேஸ்வரன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.