கரிசல்பட்டியில் கல்குவாரி காவலாளி அடித்துக் கொலை

81பார்த்தது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கரிசல்பட்டியில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியில் காவலாளியாக பணிபுரியும் மதுரை பாலமேடு பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன்(50) இன்று காலை உடலில் பலத்த காயத்துடன் கல்குவாரியில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ஏழாயிரம்பண்ணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜசேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் இதே கல்குவாரியில் பணிபுரியும் மற்றொரு காவலாளியான பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த மனோஜ்குமார்(58)
இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகவும் மனோஜ்குமாரின் செல்போன் காணாமல் போனதாகவும் இதில் ஏற்பட்ட தகராறில் நேற்று நள்ளிரவில் மனோஜ்குமார், ராஜசேகரனை கம்பால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஏழாயிரம்பண்ணை போலீஸார் மனோஜ் குமாரை கைது செய்துள்ளனர். ஏழாயிரம்பண்ணை பகுதியில் பட்டாசு மற்றும் கல்குவாரிகளில் உள்ள காவலாளிகள் அடித்து கொலை செய்யப்படுவது தொடர்கதை ஆகிவருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி