மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது

69பார்த்தது
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், ஆலங்குளம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நடைபெற்றது.

இம்முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், 12 பயனாளிகளுக்கு நத்தம் இலவச வீட்டுமனைப்பட்டா ரூ. 6, 21, 608/- மதிப்பிலும், 1 பயனாளிக்கு நத்தம் வீட்டு மனைப்பட்டா ரூ. 13, 500/- மதிப்பிலும், 38 பயனாளிகளுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கப்படும் இ-பட்டா ரூ. 24, 62, 400/- மதிப்பிலும், உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில், 41 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும், கால்நடைத் துறையின் சார்பில், 5 பயனாளிகளுக்கு தாது உப்புக் கலவையும், தோட்டக்கலைத் துறையின் சார்பில், 2 பயனாளிகளுக்கு விதைப்பைகளையும் என மொத்தம் 99 பயனாளிகளுக்கு ரூ. 30. 98 இலட்சம் மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன், இ. ஆ. ப. , அவர்கள் வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி