விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிந்தப்பள்ளி அருகே சிவகாசியை சேர்ந்த கதிரேசன் என்பருக்கு சொந்தமான் நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. பட்டாசு ஆலையில் இன்று மதியம் ஏற்பட்ட வெடி விபத்தில் சிவகாசி அருணாசலபுரத்தை சேர்ந்த அஜித்குமார் (21), என்பவர் உடல் கருகி சம்பவ இடத்திலே பலியானார். விபத்தில் பலியானவரின் தாய் ராமலட்சுமியிடம் ஆலை நிர்வாகம் சார்பில் ரூ. 5லட்சம் இழப்பீடும் , இறுதி சடங்கு செய்வதற்கு ரூ. 50 ஆயிரம் வழங்கினர்.