விருதுநகர் மாவட்டம்
சாத்தூர் நகர் பகுதியில் இயங்கி வரும் ஆட்டோக்களை அதன் உரிமையாளர்கள் இரவு வீட்டின் அருகே நிறுத்திவிட்டு தூங்க வீடுகளுக்கு சென்று விடுகின்றனர். காலையில் வந்து ஆட்டோவை பார்க்கும் போது ஆட்டோவில் உள்ள பேட்டரியை மர்ம நபர் திருடி சென்றுள்ளது தெரியவருகிறது. கடந்த பத்து நாட்களாக இருபதுக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள், மற்றும் இருசக்கர வாகனங்களில் பேட்டரி திருடு போய்யுள்ளது. இந்த பேட்டரி திருட்டு தொடர்பாக திருடு போன் ஆட்டோ உரிமையாளர்கள் சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தும் காவல் துறையினர் வழக்கு பதியாமல் உள்ளனர். மேலும் பேட்டரிகள் திருடு போயியுள்ளதால் ஆட்டோ ஓட்ட முடியாமல் வருமானம் இன்றி பெரும் சிரமத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் உள்ளனர். பேட்டரியை திருடி செல்லும் மர்ம நபரை போலீசார் விரைந்து கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.