மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம்

62பார்த்தது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம்
அருப்புக்கோட்டை புளியம்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் காத்த முத்து தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பினர். மேலும் மின் கட்டண உயர்வால் விவசாயிகள், ஏழைகள் சிரமம் அடைவதாகவும் உடனடியாக மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி