மையோனைஸ் தடைமீறி செயல்பட்டால் சட்ட நடவடிக்கை

72பார்த்தது
உணவு வணிகர்கள் எவரும் கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மையோனைஸை தயாரிக்கவோ, அவ்வாறு தயாரித்த மையோனைஸை இருப்பு வைக்கவோ, போக்குவரத்து செய்யவோ, விநியோகம் அல்லது விற்பனை செய்யவோ கூடாது என்று அறிவுறுத்தப்படுகின்றார்கள்அரசு உத்திரவினை மீறி கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மையோனைஸை தயாரிப்பது, விற்பனை செய்வது உள்ளிட்ட வணிக நடவடிக்கைகள் கண்டறியப்பட்டால், மேற்படி மையோனைஸானது பறிமுதல் செய்யப்பட்டு, உணவு மாதிரி எடுத்து, பகுப்பாய்வு செய்யப்பட்டு, பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில் தொடர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்படுகின்றது.

மேலும், உணவு பாதுகாப்புத் துறையினரின் கள ஆய்வின் போதே கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மையோனைஸ் தயாரிக்கப்படுவது கண்டறியப்பட்டால், உரிய விசாரணைக்குப் பின்னர், உணவு பாதுகாப்பு உரிமம் இடைநீக்கம் உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்படுகின்றது. மேலும், உடல்நலனை பேணிகாக்க ஏதுவாக, நுகர்வோர்களும் தடைசெய்யப்பட்டுள்ள கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட மையோனைஸை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி