விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முள்ளிசெவல் மேற்கு தெருவை சேர்ந்தவர் பாண்டி செல்வம் (29). இவர் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த அம்பிகாதேவி என்பரை காதலித்து திருமணம் செய்துள்ளார். கடந்த சில மாதங்களாக மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் மொபை போனை வாங்கி பார்த்த போது அதில் அதே பகுதியை சேர்ந்த பாண்டியராஜ் என்பருடைய மொபைல் நம்பரில் அடிக்கடி பேசியிருப்பது தெரியவரவே பாண்டியராஜை பாண்டி செல்வம் கண்டித்துள்ளார்.
அதில் இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் அங்கு கிடந்த கம்பால் பாண்டி செல்வத்தை அடித்துள்ளார். அதில் பலத்த காயமடைந்தவர் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாண்டி செல்வம் கொடுத்த புகாரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டியராஜை கைது செய்தனர்.