சாத்தூர்: பட்டாசு ஆலை வெடி விபத்து; 5 பேர் மீது வழக்குப்பதிவு

48பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அடுத்த கீழதாயில்பட்டியில் கணேசன் என்பவருக்கு இந்துஸ்தான் என்ற பெயரில் மத்திய வெடிபொருள் கட்டுபாட்டு துறை மூலம் அனுமதி பெற்று இயங்கி வந்தனர். இன்று ஜூலை 6ஆம் தேதி காலையில் தொழிலாளர்கள் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கும் போது வேதியியல் பொருட்கள் தரையில் உராய்ந்து திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. 

இதில் திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த பாலகுருசாமி என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மேலும் 5 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வெடிவிபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் ஆலை உரிமையாளர் கணேசன், 2 போர்மேன்கள் மற்றும் மேலாளர் உள்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி