அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல் பச்சை நிற கண்ணாடி மணி கண்டெடுப்பு

75பார்த்தது
வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழாய்வில் அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல் மற்றும் பச்சை நிற கண்ணாடி மணி கண்டெடுப்பு 

வெம்பக்கோட்டையில் 3ஆம் கட்ட அகழ்வாய்வு பணிகள் கடந்த ஜூன் 18ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. அகழாய்வில் இதுவரை தங்க நாணயம், சூது பவளம், செப்பு காசுகள், சுடுமண் ஆண் பெண் மற்றும் ஜல்லிக்கட்டு காளை உருவ பொம்மைகள் என பல்வேறு ஆச்சரியம் தரும் தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் தற்போது அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையலின் ஒரு பாகமும் பச்சை நிற கண்ணாடி மணியும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றை தொன்மையான மனிதர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்றும், இதன் மூலம் இங்கு சங்கு வளையல் கூடம் இருந்திருப்பதற்கான சான்று மேம்படுவதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி