காட்டுப்பன்றியால் விவசாயம் பாதிப்பு ஆட்சியரிடம் புகார்

62பார்த்தது
காட்டு பன்றிகளால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகாவைச் சேர்ந்த கிராம மக்கள் காட்டுப்பன்றிகளால் சேதமடைந்த தங்களது பயிர்களுக்கு நிவாரணம் கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகாவில் முத்துசாமிபுரம் முள்ளிச்சேவல் அக்கிவாடன்பட்டி, சுப்பிரமணியபுரம், பெருமாள் பட்டி நல்ல முத்தன் பட்டி ஆகிய ஐந்து கிராமங்களில் மக்காச்சோளம் மற்றும் உளுந்து விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த
ஊர்களில் சுமார் 150 ஏக்கர் மக்காச்சோளமும் 60 ஏக்கர் உளுந்தும் பயிரிடப்பட்டன.
ஆனால் அப்பகுதியில் காட்டுப் பன்றிகளால்
80 ஏக்கர் மக்காச்சோளம் மற்றும் 30 ஏக்கர் உளுந்து சேதமானதாக கூறப்படுகிறது.
எனவே சேதம் அடைந்த பயிர்களுக்கு உரிய நஷ்ட ஈடு உடனடியாக வழங்க கோரி அப்பகுதி கிராம மக்கள் இன்று காலை விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி