சாத்தூர்: பட்டாசு ஆலை உரிமையாளர் உள்பட 2 பேர் கைது...

52பார்த்தது
சாத்தூர் அருகே சட்டவிரோதமாக பட்டாசுகள் தயார் செய்த பட்டாசு ஆலை உரிமையாளர் உள்பட
2 பேர் கைது.
விருதுநகர் மாவட்டம்,
சாத்தூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட ஏழாயிரம்பண்ணையில் உள்ள கண்டியாபுரம் to அச்சன்குளம் செல்லும் சாலையில் கணேசன் என்பவருக்கு சொந்தமான லட்சமி பயர் ஒர்க்ஸ் வளாகத்தில் சட்டவிரோதமாக தகரசெட் அமைத்து பட்டாசுகள் தயார் செய்யப்படுவதாக தகவல் வந்தன. மேலும் தகவலின் அடிப்படையில் பனையடிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் மற்றும் காவல்துறையினர் நேரில் ஆய்வு சென்று ஆய்வு செய்யப்பட்டதில் பட்டாசு ஆலை வளாகத்தின் உள்ளே சட்டவிரோதமாக தகர செட் அமைத்து பட்டாசுகள் தயார் செய்த ஆலை உரிமையாளர் கணேசன் மற்றும் சிவகாசியை சேர்ந்த ராஜ்குமார் ஆகிய இருவரும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தன. மேலும் தயார் செய்த பட்டாசுகளை பறிமுதல் செய்த ஏழாயிரம்பண்ணை போலீஸார், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் ஆலை உரிமையாளர் கணேசன், ராஜ்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி